மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு ஆரம்பம்!!

 


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததை அடுத்து பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டன


அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் ஒருசில காட்சிகள் சென்னையின் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டன என்பதும் இந்த படப்பிடிப்பில் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின


இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் இதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இன்றைய படப்பிடிப்பில் அஜித் உள்பட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்களா? என்பது குறித்த தகவல் இல்லை


அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.