263 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு!!
நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் 227 பேர் எனவும் ஏனைய 36 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தோற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 803 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் மூவாயிரத்து 966 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை