'மூக்குத்தி அம்மன்' டிரைலர் வெளியானது!!

 


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மூக்குத்தி அம்மன் திரைப்படம். வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்


இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இடையே இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதுவரை பல பக்தி திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், இந்த படம் அரசியல் மற்றும் பக்தி ஆகியவை இணைந்த ஒரு ஆன்மீக அரசியல் படமாக உருவாகி உள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது


போலி சாமியார்கள் மதத்தை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதும் அதனை கடவுளே நேரடியாக வந்து எப்படி தடுக்கின்றார் என்பதும் தான் கதை என்பது தெரிகிறது


குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும்தான் இன்னும் மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியவில்லை என்றும் அதையும் இன்னும் ஐந்து வருடத்தில் நான் நடத்திக் காட்டுவேன் என்றும் ஒரு போலி சாமியார் சவால் விடும் காட்சி இன்றைய அரசியலை அப்படியே பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடதக்கது


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூக்குத்தி அம்மன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ஆழமும் அழுத்தமும் இருப்பதால் இந்த படம் நிச்சயம் அவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


ஏற்கனவே ’எல்கேஜி’ என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆர்ஜே பாலாஜி முற்றிலும் வேறுபட்ட ஒரு திரைப்படத்தை கொடுத்து உள்ளார் என்பதும் இது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.