தம்பியை கொன்ற அண்ணா தற்கொலை!
மத்துகம – அழுத்கங்கொட பகுதியில் ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தினால் ஏற்பட்ட மோதலில் இளைய சகோதர் மீது மூத்த சகோதரர் கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதை தொடர்ந்து இளைய சகோதரர் படு காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த நிலையில் இளைய சகோதரர் களுத்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூத்த சகோதரர் அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசித்து பாரவூர்தி ஒன்றின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை கேள்வியுற்ற அவரின் தாய் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை