இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 488 பேர் பலி!


 இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 488 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரத்து 470 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து 46 ஆயிரத்து 429 ஆக உயர்வடைந்துள்ளது.

63 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணக்கை 72 இலட்சத்து ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

6 இலட்சத்து 25 ஆயிரத்து 857 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.