3 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான 23 வயது இளைஞர்!

 


கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய இளைஞரொருவர் அதன் பின்னர் மேலும் இரண்டு தடவைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு மூன்றாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடு திரும்பிய குறித்த இளைஞர், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது முதன்முறையாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பின்னர் தொற்றில் இருந்து குணமாகி வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த இளைஞர், அவரது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் செப்டம்பர் 17 ஆம் திகதி சிலாபம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் சோதனையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸுக்கு உள்ளாகியமை தெரியவந்தது.

அதன்பிறகு குறித்த இளைஞர் இரனவிலா கொவிட் -19 சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார்.

அதன் பின்னர் மீண்டும் கொரோானா தொற்றில் இருந்து மீண்டு இரண்டாவது முறையாக வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இருப்பினும் மூன்றாவது முறையாக நோய்வாய்ப்பட்ட அவர், மீண்டும் ஒக்டோபர் 02ஆம் திகதி சிலாபத்தில் உள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதன்போதும் மூன்றாவது முறையாக அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இலங்கையில் ஒரே நபர்  மூன்று முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்ட சந்தர்ப்பம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.