கட்டுநாயக்க பகுதியில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 கட்டுநாயக்க சுகாதாரப்பிரிவுக்கு உட்பட்ட சீதுவ, கந்தான மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இன்று மாலை 6.00 மணிக்குள் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவுகளுக்கு பொறுப்பான நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீதுவ சுகாதாரப் பிரிவில் 20 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அவர்களில் 07 ஆண்கள் மற்றும் 13 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நான்கு கொரோனா நோயாளிகள் நீர்கொழும்பு சுகாதாரப் பிரிவில் பதிவாகி உள்ளனர்.

கந்தான சுகாதார மருத்துவ பிரிவில் 8 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.