வீதியில் பயணித்தவர் மீது முறிந்து வீழந்த மரம்

 வவுனியா கண்டி வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07) பிற்பகல் முறிந்து அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மிது வீழ்ந்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , 


இன்று பிற்பகல் வவுனியா கண்டி வீதி பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள மரம் திடீரென்று முறிந்து வீழ்ந்துள்ளது . இதன்போது அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார் .


இவ்விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு முன்பாக உள்ள இராணுவ முகாமின் படையினர் முறிந்த மரத்தை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அப்புறப்படுத்தும்  நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Blogger இயக்குவது.