கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3306 ஆக உயர்வு!

 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3306 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3296 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4523 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1204 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13 என்பதும் குறிப்பிடத்தக்கது.Blogger இயக்குவது.