புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு வவுனியா பாடசாலைகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக வவுனியா மாவட்ட பாடசாலைகளை தொற்று நீக்கும் செயற்பாடு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன், தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரசபையினால் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது கிருமி நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டதுடன், கைகழுவுதல் உள்ளிட்ட உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.