பொல்கொட ஏரியைச் சுற்றி 37 சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள்
மொரட்டுவவில் உள்ள பொல்கொட ஏரியைச் சுற்றி 35 க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி பொல்கட எரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 37 கட்டிட நிர்மாணத்துக்கு சுற்றாடல் அமைச்சின் ஒப்புதல் பெறவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டவிரோத கட்டுமானங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை