ஊரடங்கு சட்டத்தை மீறிய 388 நபர்கள் கைது!



தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 388 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 58 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நேற்று திங்கட்கழமை வரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்  

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்கள் அங்கு வருபவர்களுக்கு கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்கான வசதிகளை செய்துக் கொடுப்பதுடன் , அவர்களின் உடல் வெப்பத்தை அளவிடவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.