மனைவி தூக்கு! மனமுடைந்து தானும் தூக்கில் தொங்கிய தந்தை!

 தமிழகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததில் இருந்து சோகமாக இருந்த கணவன் தானும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சத்யா (28). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி நெஞ்சுவலி காரணமாக மனமுடைந்து இருந்து வந்த சத்யா வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட தியாகராஜன் அதிர்ச்சியடைந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தனது மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் தியாகராஜன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து மனைவி இறந்த அதே இடத்தில் மனைவியின் புடவையால் நேற்று தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறனர்.

பெற்றோரை இழந்து 3 குழந்தைகள் அனாதையானது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.Blogger இயக்குவது.