மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

 இந்தியாவில் தனக்கு வந்த தம்பதியரின் நிர்வாண வீடியோவைக் கண்டு, கணவன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், இருக்கும் வீடு ஒன்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் இருப்பது குறித்து பொலிசாருக்கு அக்கம்பக்கத்தினர் கடந்த சனிக்கிழமை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்த வந்த பொலிசார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதன் பின் இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றம் சாட்டப்பட்ட Nageshwara Rao என்பவரை பிடிப்பதற்காக பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

Nageshwara Rao இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் மனைவியை கொலை செய்ததுடன், இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் அவர் கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தனது மனைவியான Nirmalamma நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவன் Nageshwara Rao, தான் முன்பு இருந்த பூட்டப்புலத்தில் இருந்து நெல்லூரின் நவலாக் கார்டன் பகுதிக்கு வீடு மாறியுள்ளார்.

இது போன்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த போது, Nageshwara Rao-வின் வாட்ஸ் அப்பிற்கு தம்பதியர் நிர்வாணமாக இருக்கும் வீடியோ ஒன்று அவருக்கு வந்துள்ளது.

அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அது தன்னுடைய மனைவி தான் என்று சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு சென்று உடனடியாக மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தன்னுடைய மனைவியின் நடவடிக்கைக்கு காரணமான உறவினர் Venkatratnamma என்பவரையும் வீட்டிற்கு வரவழைத்து குத்தி கொலை செய்துள்ளார்.

ஆனால், அந்த வீடியோவில் இருந்தது அவர் மனைவி தான் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, இதனால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.