இலங்கை மறுபடியும் 500 மில்லியன் டொலர் கடனை பெறுகிறது!

 சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையேயான பேச்சவார்த்தையின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதியில் கடன் திருப்பிச் செலுத்தப்படவுள்ளது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதன்படி கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறுப்படுகிறது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.