1500 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை !

 வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களில் கடந்த செப்டெம்பர் மாதம் 1591 வாகனச்சாரதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் , தண்டப்பணம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கும்போது , 

வவுனியா போக்குவரத்து பொலிசாரினால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் கடந்த செப்டெம்பர் மாதம் காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 83 சாரதிகள் , சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 8 பேர் உட்பட 91 சாரதிகளுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது . 

வாகன காப்புறுதிப்பத்திரம் , போக்குவரத்து அனுமதிப்பத்திரம் , தவறான முறையில் வாகனம் செலுத்தியமை , வாகனம் செலுத்தும்போது தொலைபேசிப்பானை , வாகன இருக்கைப்பட்டி அணியாமை போன்ற 1500 சாரதிகளிடம் சிறு குற்றங்களுக்கு எதிராக தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது . 

இவ்வாறு கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் போக்குவரத்துப் பொலிசார் போக்குவரத்து விதிமுறை சட்டங்களை மீறிய 1591 வாகனச் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இவ்வாறு வரும் காலங்களிலும் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார் .
Blogger இயக்குவது.