நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்தது!

 நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளது.

இன்று மட்டும் இதுவரை 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 145 பேரும்  மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அதன்படி  மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளை பேணிய 97 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 48  பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 1,591 ஆக அதிகரித்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.