ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்

 தற்போதைய கொவிட் - 19 தொற்று நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு சேவைப் பயணாளர்களின் வருகை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் - 19 திடீர் நிலை காரணமாக ஓய்வூதியத்தை செயற்படுத்துவதற்காக நேர்முகப்பரீட்சைக்காக ஓய்வூதியக்காரர்களை அழைத்தல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதிய திணைக்களத்துக்கு வரும் அனைத்து ஓய்வூதியகாரர்களின் வருகை ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் மீண்டும் அறிக்கும் வரையில் இடைநிறுத்துவதற்கு ஓய்வூதிய திணைக்களம் தீரமானித்துள்ளது.

இது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் எந்தவொரு ஓய்வூதியக்காரரும் ஓய்வூதிய திணைக்களத்திற்குள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தயவுடன் அறிவித்துக்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திணைக்களத்தின் மூலம் கிடைக்கவேண்டிய சேவைகள் இருக்குமாயின் அவற்றை 1970 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.