கேரள கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் கைது

 யாழ்பாணம் கடற் கரையோர பகுதியில் 111 கிலோ கேரள கஞ்சாவுடன், ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் கடற்கரை பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்துள்ள கடற்படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். குறித்த படகிலிருந்து 111 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப் பொருளை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , இதன்போது படகிலிருந்த ஐந்து பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, இதன்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கடத்தலுடன் நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளதாக தெரியவில்லை. அதனால் , இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , சந்தேக நபர்கள் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.