மூடப்பட்டது வைத்தியசாலையின் 5ஆவது மாடி

 மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வரும் ஹொரணை கந்தான்ஹேன பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது நாகொடை வைத்தியசாலையில் நேற்று மதியம் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தெரியவந்துள்ளது என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த நோயாளி உடனடியாக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இந்த நபரின் மனைவி ஹொரணை வைத்தியசாலையில் தாதியாக சேவையாற்றுவதால், அது தொடர்பாக ஹொரணை வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் களுபோவில கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த தாதி அவரது இரண்டு பிள்ளைகளுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டு அவர்கள், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த தாதி சேவையாற்றிய ஹொரணை வைத்தியசாலையின் 5வது விடுதியில் வெளி நோயாளர்களை அனுமதிக்கப்படுவது மற்றும் அங்கிருந்து வெளியேற முடியாத வகையில் தற்காலிமாக விடுதி மூடப்பட்டுள்ளதாக ஹொரணை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இந்திக தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

எப்படியான அவசரமான நிலைமை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில், ஹொரணை வைத்தியசாலையின் பழைய அவசர சிகிச்சை பிரிவு மற்றும் முதலாம் இலக்க விடுதி என்பன கொரோனா நோயாளிகளுக்காக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Blogger இயக்குவது.