600 கோடி ரூபாய் பெறுமதியான உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய சிறிய சிலை மீட்பு!
இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பெறுமதியான சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பொலிஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட நால்வரை, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, சந்தேகநபர்கள் வசமிருந்த 2 அங்குல உயரமான, மிக பழைமை வாய்ந்த நீல மாணிக்கக்கல்லில் செய்யப்பட்ட புத்தர் சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்துகள் இல்லை