உலகளாவிய பசிக் குறியீடு பட்டியலில் இலங்கைக்கு 64 ஆவது இடம்

 உலக அளவில் 107 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கை பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை நாடுகளின் பட்டியலில் 64 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இப் பட்டியலில் இலங்கை கடந்த ஆண்டு 66 ஆவது இடத்தில் இருந்தது.

உலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் பசி குறித்து  அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும், பசிக்கு எதிரான திட்டங்களில்  முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளை மதிப்பிடுவதற்கும் வருடாந்திர குறியீட்டு பட்டியல்  வடிவமைக்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் தற்போது இந்தியா 97 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 88 ஆவது இடத்திலும், மியன்மார் 78 ஆவது இடத்திலும், நேபாளம் 73 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 99 ஆவது இடத்திலும் உள்ளது.

இப் பட்டியலில் சாட் (107), கிழக்குத் திமோர் (106), மற்றும் மடகாஸ்கர் (105). ஆகியவ‍ை இறுதி இடங்களில் உள்ளது.

அந்த அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 690 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆவர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.