இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனையில் சம்பவம்

 கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டமான கிரின் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் வீட்டுத்தொகுதியின் முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள் உட்பட சிறுவர்களின் 5 துவிச்சக்கர வண்டிகள் தீ வைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும், இந்நாசகார செயலினால் பாதிப்புக்குள்ளான இடம் புகைபடிந்து கருமையாக உள்ளதுடன்,  மின்சார சபைக்கு சொந்தமான மின்மானிகள் தீயில் சேதமடைந்த போதிலும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்து முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கிரீன் பீல்ட்  வீட்டுத்திட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் சிலர் திடீரென அதிகாலையில் உட்புகுந்து இத்தீயினை வைத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும்  அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.