முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம்!எல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தெமோதரை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் இன்று காலையில் 09.30 மணியளவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளையிலிருந்து பண்டாரவளை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வேககட்டுப்பாட்டடை இழந்து தெமோதரையிலிருந்து பதுளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இரண்டு மாத குழந்தையும் ஏழு வயது சிறுவனும் ஆண்கள் நான்கு பேரும் பெண்கள் மற்றும் இரண்டு பேர்  எட்டுபோர் படுகாயங்களுடன் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து குறித்து எல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

Blogger இயக்குவது.