அம்மா...!!
ஆலயம் இன்றி
அவனியில் வாழும்
அன்புத் தெய்வம் அம்மா
தியாகத்தின் தீபமாய்
தனக்கென இல்லாமல்
பிள்ளைக்கென
நிலவென தேய்ந்து
நெஞ்சில் நிலைத்து
நினைவாய் வாழ்பவள்
கருவில் எமை சுமந்து
கண்ணுள் மணியாக
மண்ணில் வழர்த்தவள்
வலிகள் பல
வந்த போதும் - தன்
நெஞ்சுக்குள் புதைத்து
எமக்கென....
மெழுகாய் உருகி
வளமான வாழ்வு தந்த
வள்ளல் நீ தாயே
வேசம் இல்லாத
பாசம் வைத்து
நெஞ்சம் நிறைந்த
நேசம் தருபவள்
அம்மா என்ற
ஒரு சொல்லின்
அகராதியாகி
என் மொத்த
உறவின் உருவமாய்
உயிர் வாழும் தெய்வம்
நீ தாயே...!
ஜீவி ✍️❤️

.jpeg
)





கருத்துகள் இல்லை