சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா!!
இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நேற்று (புதன்கிழமை) வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேலியகொட மைக்ரோ நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கும் ஜா-எல கெம்சோ நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பேலியகொட மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பேலியகொட மீன் சந்தையை அண்மித்த பகுதிகளில் நேற்று ஆயிரத்து 186 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குறித்த பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பேலியகொட மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்றவர்கள் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை