பிக் பாஸ் 4 எதிரிகளாகும் நண்பர்கள்!


 யாரோ ஒருவர், இருவர் சொன்னதல்ல; பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கணித்தது போலவே நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். ரேகாவா, சனம் ஷெட்டியா என்றிருந்த போட்டியில், சனம் உள்ளே இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்வளவு லாபம் என்று மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதனை உண்மையாக்கும் விதத்தில், ரேகா வெளியேறிய சூடு இறங்குவதற்குள்ளாகவே, தன் தரப்பு ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் சனம்.

பிக் பாஸ் வீட்டின் முக்கியமான கண்டெஸ்டுகளில் ஒருவராக இருக்கும் அனிதா மற்றும் சனம் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே நல்ல தோழிகளாக இருந்தனர். மற்றவர்களுடன் எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டாலும், இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும், ஆதரவும் கொடுத்துக்கொண்டு பக்கபலமாக இருந்தனர். ஆனால், கமல்ஹாசன் வைத்த ‘வீட்டில் முகமூடி அணிந்துகொண்டிருப்பவர்களுக்கு மாஸ்க்’ கொடுக்கும் போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக அனிதாவுக்கு மாஸ்கை கொடுத்தார் சனம். இது இத்தனை நாட்களாக நட்பு பாராட்டிய இவர்களுக்கிடையில் நடைபெற்றதால் பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். அன்பைப் பறிமாறும் விதத்தில் பேட்ஜினை ஆஜித்துக்குக் கொடுத்ததன் மூலம் சனம் ஷெட்டியின் திட்டம் ஓரளவுக்கு வெளியே தெரிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இத்தனை நாட்களும் பழகிய அனிதாவின் பல ரகசிய பேச்சுக்களையும், அனிதா யாருக்கெதிராக எப்படியெல்லாம் பேசுவார் என்பதையும் சனம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அதேசமயம், பாட்டிலுக்குள் பந்து போடும் போட்டியில் சனமும், வேல்முருகனும் வெற்றிபெற்றதால் அடுத்த வார நாமினேஷனில் இவர்கள் பெயர் இருக்காது. எனவே, அனிதாவை வெளியேற்றுவதற்கு சனம் ஷெட்டிக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பினை அவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்றே சொல்லலாம். ஆஜித்துக்கு பேட்ஜ் கொடுத்ததன் மூலம், ஏற்கனவே சூப்பர் சிங்கர் ஜூனியரில் மக்கள் மனம் கவர்ந்த ஆஜித்துக்கு உதவி அந்த நற்பெயரையும் சம்பாதிக்கிறார் சனம்.

சனம் ஷெட்டிக்கு மட்டுமின்றி வீட்டிலுள்ளவர்கள் பலருக்கும் ஆபத்தாகக் கருதப்படும் இன்னொரு நபர் ரியோ. விஜய் டிவி பின்புலத்திலும், மக்கள் ஆதரவும் இருக்கும் ரியோவுக்கு பிக் பாஸ் வீட்டில் எந்த முன்னுரிமையும் கிடையாது என்பதை கமல் கடந்த இரு நாட்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் மூலம் தனது நடுநிலைத் தன்மையை கமல் உணர்த்தினாலும், வீட்டிலுள்ளவர்களின் ஆதரவைப் பொறுத்தே ரியோவின் எதிர்காலம் இருக்கும். அடுத்தவார கேப்டன் ரியோ என்ற நிலையிலும், ஹவுஸ்மேட்ஸ் பலரும் அதிகமான மாஸ்குகளை ரியோவுக்குக் கொடுத்து, அவரது கேப்டன்ஷிப் சிறப்பானதாக இருப்பதற்கு கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என உணர்த்தியிருக்கின்றனர்.

அதேசமயம், ஹவுஸ்மேட்ஸ் பலரின் டார்கெட்டாக இருந்த சுரேஷ், இயலாத வயதிலும் கேப்ரியல்லாவை தூக்கி சுமந்த நிகழ்வின் மூலம், ஒரு பாசிடிவ் பாதைக்கு தனது பயணத்தை மாற்றியிருக்கிறார். எனவே, அனிதா சம்பத்-சனம் ஷெட்டி-ரியோ-கேப்ரியல்லா-சுரேஷ் ஆகிய வலிமையான கண்டெஸ்டுகளுக்குள் என்ன போட்டியும் பிரச்சினையும் ஏற்படப்போகிறது என்பதும், மற்றவர்கள் செய்வதற்கும், சொல்வதற்கும் ஆமாம் போட்டுக்கொண்டிருக்கும் நிஷா, சோமு, சம்யுக்தா போன்ற அதிக ஈடுபாடு இல்லாத போட்டியாளர்களில் யாரெல்லாம் நாமினேஷனைக் கடக்கப்போகிறார்கள் என்பதும் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இருக்கும்.

-முத்து-

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.