கொரோனா தொற்றாளர் முல்லைத்தீவில் அதிகரிப்பு!!

 


முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடைய உறுவினர்கள் என 220 பேர் முல்லைத்தீவில் 59வது படைப்பிரிவு பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் அவர்களுக்கு பகுதி பகுதியாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 6 சிறுவர்கள் அடங்கலாக 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.