யாழில் சிறு வியாபார வர்த்தகர்கள் கவனயீர்ப்பு!!

 


யாழ் நகர வர்த்தகர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று(திங்கட்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்றுமாறு யாழ்பாண மாநகர சபை அறிவித்து 7 நாட்கள் காலக்கெடு விடுத்துள்ளது.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக யாழ் நகர வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அவர்கள் ஆளுநரிடம் மகஜரொன்றையும் கையளித்திருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.