நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

 


நீட் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில்  வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீட் தேர்வு பரீட்சையை எழுதிய சுமார் 14 இலட்சம் மாணவர்களின் முடிவுகளே இன்று வெளியாகவுள்ளன.

நாடு முழுவதும் 80,005 எம்.பி.பி.எஸ் இடங்கள், 26,949 பி.டி.எஸ் இடங்கள், சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்காக 52,720 இடங்கள், 525 பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச் இடங்கள் உள்ளன.

இவற்றுக்காக இந்தியா முழுவதும் 2020- 2021 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி நடைபெற்றது.

தமிழகத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 இலட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் கொரோனாதொற்று காரணமாக ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதாதவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி  ஒக்டோபர் 14ஆம் திகதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுமார் 14 இலட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேர்வு முடிவுகள்  www.nta.ac.in, www.ntaneet.nic.inஎன்ற இணையதளங்களில் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.