20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

 


20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பமாகின்றது.

20 ஆவது அரசியலமைப்பு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, சர்ஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 20ஆம் சட்டமூலத்தின் 5 மற்றும் 22 ஆம் உட்பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதில் இரண்டு சரத்துகள், குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்றப்படுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Blogger இயக்குவது.