தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு!

 


தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக உயர்த்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ள தொழில் ஆலோசனை சபைக் கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வயது முதிர்ந்தவர்களின் சனத்தொகை வெகுவாக அதிகரித்து, இளம் வயதினரின் வீதம் குறைந்து செல்வதன் மூலம் எதிர்கால தொழில் ஆளணியில் பாரிய வெற்றிடம் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், உலகில் ஏனைய நாடுகளைப்போன்று ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, தகைமையுள்ள ஊழியர்களின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் நோக்கில், தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60வரை அதிகரிக்க கவனம் செலுத்துவோம்.

அத்துடன், தொழில் ஆலோசனை சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு சேவை சம்மேளனம் மற்றும் தொழிற் சங்கங்கள் பூரண இணக்கத்தை தெரிவித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.