பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிவு!!
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
இந்நிலையில், ஒக்டோபர் 28 திகதி “கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தை பூரணமான பல்கலைக்கழகம் ” என அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை