ஆயுதம் கிண்ட அலவாங்கு வந்தது!!
வவுனியா- பெருமெடுப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி நடத்தப்பட்ட அகழ்வில் அலவாங்கு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வவுனியா நீதிபதி மற்றும் ஓமந்தை பொலிஸாரும் குறித்த பகுதிக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில், தீயணைப்பு வாகனங்கள் தரித்து நிற்க கனரக வாகனங்களின் உதவியுடன் சுமார் 10அடிக்கும் ஆழமாக நிலம், அகழ்வு செய்யப்பட்ட போது அலவாங்கு ஒன்றும் மதுசார வெற்று ரின் என்பனவும் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து தோண்டப்பட்டு கிடங்கினை மூடிவிட்டு, பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை