நீர்கொழும் ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கு கொரோனா!
நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள, மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான வர்த்தகர் மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பை பேணியவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இருப்பினும், அவர் எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
குறித்த வர்த்தகர் கட்டானவில் கிம்புலாப்பிட்டி பகுதியில் வசிப்பவர்.
இவர் சமீபத்தில் திவூலப்பிட்டியில் நடந்த திருமணத்தில் பங்கேற்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை