கொழும்பில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி!

 கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் காலி கித்துலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். மற்ற நபர் ராகம, பட்டுவத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கித்துலம்பிட்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இருந்து காலி நோக்கி ரயிலில் பயணித்துள்ளார். அத்துடன் பிரதேசத்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கும் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவரது மனைவி கராப்பிட்டி வைத்தியசாலையின் தாதியாக செயற்பட்டுள்ளார். தொற்றுக்குள்ளான நபருக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.