மாணவி தூக்கிட்டு தற்கொலை ; மஸ்கெலியாவில் சம்பவம்

 மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலாங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று 7ஆம் திகதி காலை 10 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட சோலகந்தை பிரிவை சேர்ந்த 18 வயதுடைய ராமகிருஷ்ணன் தர்சிகா என்ற பாடசாலை மாணவியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி தனது வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மரணிப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தனது காதலுக்கு வீட்டார் விரும்பாததால் தூக்கிட்டு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பாக மஸ்கெலியா  திடீர் மரண விசாரணை அதிகாரி  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.Blogger இயக்குவது.