கம்பஹாவில் ஊரடங்கு அமுல்!
கம்பஹா – மினுவாங்கொட, திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகள் உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் இன்று (04) சற்றுமுன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டியவை சேர்ந்த பெண் (39-வயது) ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு ஐடிஎச் தொற்று நோய் பிரிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
அதன்படி, கம்பஹா மருத்துவமனையின் 15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை