உண்டியலில் காணிக்கையிட்டு உண்டியல் உடைத்த கள்ளன்!

 ஒரு பக்தியுள்ள திருடனை அடையாளம் காண உதவுமாறு சென்னை பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலை தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வழிபடுவது பக்திமான்களின் வழக்கம். அப்படியான ஒரு பக்தியுள்ள திருடன் பற்றிய விபரத்தையே சென்னை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

திருவான்மியூரில் உள்ள ஒரு ஆலயத்திற்குள் நுழைந்து இரண்டு உண்டியல்களை உடைத்து கொள்ளையிட்ட திருடன், கொள்ளையிடுவதற்கு முன்னர் ஆலயத்தில் வழிபாடு செய்வது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.


திருவன்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மருண்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலைஅருகிலுள்ள கட்டிடத்திலிருந்து கோயிலின் காம்பவுண்ட் சுவரில் குதித்திருக்கலாமென நம்பப்படும் திருடன், ஆலயத்திற்குள் நுழைந்ததும், உண்டியலிற்குள் எதையோ இடுவது பதிவாகியுள்ளது. பின்னர் ஆலயத்தில் வழிபட்டார்.

தனது திருட்டு முயற்சி வெற்றிபெற வேண்டும் என அவர் காணிக்கையிட்டு, வழிபட்டிருக்கலாமென பொலிசார் கருதுகிறார்கள்.

கோயில் வளாகத்திலிருந்த இரண்டு உண்டியல்களும் ஒரு மாதத்தின் மேலாக திறக்கப்படாமல் இருந்தன. அவற்றிற்குள் குறைந்தது ரூ .1 லட்சம் இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.