மூக்கிற்குள் ஹெரோயின் ஒளித்து வைத்திருந்த யாழ் இளைஞன்!

 போதைப்பொருளை மூக்கு துவாரத்திற்குள் மறைத்திருந்த பயங்கர கில்லாடியொருவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ் நகரை அண்டிய முளவை சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த பகுதியில் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் தகவல் கிடைத்ததும், அவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். பொலிசாரால் கைது செய்யப்பட போகிறேன் என்பதை தெரிந்ததும், ஹெரோயினை மூக்கு துவாரத்திற்குள் அவர் மறைத்து வைத்துக் கொண்டார்.

அவரது மூக்கிற்குள் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.Blogger இயக்குவது.