துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா– எச்சரிக்கை பதிவு

 கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வரும் வேளையில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

அதே வேளையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மாஸ்க் அணிதல் போன்ற அடிப்படை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என அரசாங்கமும், மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

தற்போது பொதுமக்கள் துவைத்து மீண்டும் பயன்படுத்தும் துணி வகையிலான மாஸ்குகளை பெருவாரியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் துணி வகை மாஸ்குகளை அழுக்கானால் மட்டுமே துவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ஆனால் துணி வகை மாஸ்குகளை தினமும் துவைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும், ஆய்வாளருமான ரெய்னா மெக்கண்டைர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், சர்ஜிக்கல் மாஸ்க், மற்றும் துணி மாஸ்க் இரண்டுமே எளிதில் அசுத்தமாகக் கூடியவை.

இதில் சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் அதனைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் துணை மாஸ்கை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆனால் துணி மாஸ்க்கை தினமும் துவைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் போதே அது கிருமிகள் படிந்து அசுத்தமாகிவிடும். கண்ணுக்கு அழுக்காகத் தெரியவில்லை என்றாலும் அது ஆபத்தானது தான்.

கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதனைத் தினமும் துவைப்பதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.