உடைந்து விழும் நிலையில் மின்சார தூண்கள்!

 வவுனியா – குழுமாட்டுச்சந்தி, மரக்காரம்பளை வீதியை 3.40 கிலோ மீற்றர் தூரத்திற்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் காரணமாக வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலமையில் காணப்படுகின்றது.

வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த வீதி அபிவிருத்தி பணி அண்மையில் ஆரம்பமானது.

இந்நிலையில் இவ் அபிவிருத்தி பணியின் போது பயன்படுத்தப்படும் வீதியில் மண், கற்களை அழுத்தும் இயந்திரத்தின் செயற்பாட்டின் போது வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதுடன் சில தூண்கள் பாதையிலும் காணப்படுகின்றன.

இதன் காரணமாக அவ் வீதியூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.Blogger இயக்குவது.