அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தனிகர்

 இந்திய உயர்ஸ்தானிகருக்கும், அமைச்சர் வாசுதேவநாணகக்காரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நீர்வழங்கள் அமைச்சில் இடம் பெற்றது.

இச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,

இந்திய நாட்டில் செயற்படுத்தப்படும் சுகாதார வசதி, குடிநீர் விநியோகம் தொடர்பான அடிப்படை காரணிகளை  இந்நிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெளிவுப்படுத்தினார்.  

அத்துடன் 5 வருட காலத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான  குடிநீரை  வழங்கும்  செயற்திட்டடம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

தெற்காசிய நாட்டவர்கள் ஒன்றினைய வேண்டும் என்ற  எமது கொள்கையினை இந்திய உயர்ஸ்தானிகர் வரவேற்றார். இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு, மற்றும்  இதர அபிவிருத்தி  செயற்திட்டங்கள் தொடர்பில் பேசப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின்  பலன்  மக்களுக்கு  முழுமையாக கிடைககப் பெற வேண்டும் என்றும் இன்போது கவனத்திற் கொள்ளப்பட்டது.

தற்போது அபிவிருத்தி செயற்திட்டங்கள்  துரிதமாக முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என  இந்நிய  உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாக  அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.