ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் வர்த்தக நிலையங்கள் திறப்பு!

 இதற்கமைவாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8 .00 மணிவரையில் இந்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கம்பஹா மாவட்டத்தின் சகல சதொச, கூட்டுறவு மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அதேநேரம் வெலிசறை பொருளாதார நிலையமும் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தறபோது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் கம்பஹா மாவட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை சாதாரண விலையில் விநியோகிப்பது சம்பந்தமாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்ததையின் போது இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கம்பாஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.