நாளைய பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடைய தேவையில்லை – அனைத்தும் மிகவும் பாதுகாப்பான ஏற்பாடுகளுடன் நடைபெறும்

 நாளைய தினம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு பரீட்சைகளுக்கும், நாடு முழுவதும் சுமார் மூவாயிரம் பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

பரீட்சை நிலையங்கள் அனைத்தும், சுகாதார தரப்பினரால் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சகல பரீட்சை நிலையங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அத்துடன், பரீட்சார்த்திகளுக்கு இடையில் 2. 5 மீற்றர் இடைவெளி பேணும் வகையில், பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

ஊரடங்கு அமுலாகும் பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்க்ள, பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.