ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் விசேட கோரிக்கை!
புங்குடுதீவில் கொரோனா தொற்று உறுதியான பெண்ணின் திருமண நிச்சயதார்த்த நிகழ்விலும் மற்றைய தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேச மக்கள் தங்கள் தகவல்களை தந்துவுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் தகவல் நிலைய தொலைபேசிக்கு O21-222 6666 என்ற இலக்கம் ஊடாக தகவல்களை வழங்கி உதவுமாறு கோரப்பட்டுள்ளது.
இதனை ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
தொற்றுக்கு உள்ளான பெண் 27ம் திகதி வீடு திரும்பி மறுநாள் கம்பஹா சென்று மீள 4ம் திகதி வீடு திரும்பியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை