யாழில் குளவி கொட்டி முதியவர் ஒருவர் பலி!

 வரணி பகுதியில், குளவிக்கொட்டுக்கு இலக்கான கொக்குவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த பரமாணந்தம் பொன்னம்பலம் (வயது – 78) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (05) உயிரிழந்துள்ளார்.

செப்டெம்பர் 17ஆம் திகதியன்று, வரணி பகுதியில் உள்ள கோவிலுக்கு பூஜை செய்வதற்காக இவர் சென்றபோது, குளவிகள் கூட்டமாக வந்து இவரது தலையில் கொட்டியுள்ளன.

இதில் மயக்கம் அடைந்த இவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.