பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கிய அறிவிப்பு!!

 


பொதுமக்களுக்கு தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இவ்வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு 


தொலைபேசி- 0114354550, 0112354550


தொலைநகல்- 011 2348855


அலுவலகம் – 0112338073


ஜனாதிபதி நிதியம் – 0112354354


(4800, 4814 , 4815, 4818)


தொலைநகல்– 011 2331243Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.