தனுஷாக மாறிய தீனா-வைரலாகும் புகைப்படங்கள்!!

 


’கலக்கப்போவது யாரு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் புகழ்பெற்று தற்போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் தீனா. லோகேஷ் கனகரஜின் ‘கைதி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த தீனா தற்போது தளபதி விஜயுடன் ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும், இந்தப்படம் வெளியானால் அவரது மார்க்கெட் கோலிவுட்டில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


இந்த நிலையில் தனுஷின் தீவிர ரசிகரான தீனா, தனுஷ் நடித்த சில படங்களின் கேரக்டர் போலவே மாறிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பாக ’ஆடுகளம்’ கருப்பு கேரக்டரும், ’அசுரன்’ சிவசாமி கேரக்டரிலும் தீனா அச்சுஅசலாக தனுஷ் மாதிரியே இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது


இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இந்த புகைப்படங்களுக்கு தனுஷ் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.