இயக்கச்சி விவசாயிகளின் கைது: கண்டிக்கப்பட வேண்டியதொன்று !

 

முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்
ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன் அறிக்கை

அண்­மை­யில் இயக்­கச்சி கோவில் வயல் பகு­தி­யில் தமது வயல்­நி­லங்­களை விதைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கத் தயார்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்த 12 விவ­சா­யி­க­ளைச் சுண்­டிக்­கு­ளம் வன­வள திணைக்­க­ளத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் கைது செய்­த­து­டன் அவர்­க­ளின் விவ­சாய உப­க­ர­ணங்­க­ளை­யும் கைப்­பற்­றி­ய­மைக்கு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.


இது தொடர்­பில் அவர் அனுப்­பி­வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:


இயக்­கச்சி கோவில் வயல் பகு­தி­யில் தமது வயல்­நி­லங்­களை விதைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கத் தயார்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்த 12 விவ­சா­யி­க­ளைச் சுண்­டிக்­கு­ளம் வன­வள திணைக்­க­ளத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் எவ்­வித நியா­ய­பூர்­வ­மான கார­ணங்­க­ளும் இல்­லா­மல் கைது செய்தமை கண்­ட­னத்­துக்கு உரி­யது.


அவர்­களை விடு­விக்­கும்­படி கோரி அவர்­க­ளின் உற­வி­னர்­க­ளும் பொது­மக்­க­ளும் வன­வள திணைக்­கள வாச­லில் கூடிக் கோரிக்கை விடுத்­த­போது அங்­கி­ருந்த அதி­கா­ரி­கள் விவ­சா­யி­களை விடு­விக்க மறுத்­து­விட்­ட­னர். எனி­னும் மக்­க­ளின் கோரிக்கை வலுப்­பெ­றவே அன்று மாலை விவ­சா­யி­கள் பொலிஸ் நிலை­யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். மறு­நாள் அவர்­கள் நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­ட­போது மன்­றில் அவர்­க­ளின் காணி உரி­மைப் பத்­தி­ரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதை அடுத்து அவர்­கள் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.


பிர­தே­சத்­தின் நிர்­வாக மேலா­ள­ரால் காணி ஆணை­யா­ளர் திணைக்­க­ளத்­தின் அங்­கீ­கா­ரத்­துக்கு அமைய வழங்­கப்­பட்ட காணி­களை வன­வ­ளத்­தி­ணைக்­க­ளம் உரிமை கொண்­டாடி பிர­தேச செய­லா­ள­ரின் அதி­கா­ரத்தை கேள்­விக்­குள்­ளாக்­கும் அள­வுக்கு இந்­த­நாட்­டின் சட்ட ஒழுங்கு இன­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு சீர்­கு­லைக்­கப்­ப­டு­கி­றதா என்ற கேள்வி மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.


ஒரு­பு­றம் உள்­ளூர் விவ­சாய உற்­பத்­தி­க­ளை­யும் கட­லு­ணவு உற்­பத்­தி­க­ளை­யும் பெருக்கி வெளி­நாட்டு இறக்­கு­ம­தி­யில் நாடு உண­வுக்­குத் தங்­கி­யி­ருக்­கும் நிலை­மையை இல்­லா­மல் செய்­யப்­போ­வ­தாக ஜனா­தி­ப­தி­யும் பிர­த­ம­ரும் பெரும் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். மக்­க­ளுக்­குச் சொந்­த­மான விவ­சாய உற்­பத்­தி­ நி­லங்­க­ளை­யும் மீன்­பிடி மையங்­க­ளை­யும், விவ­சா­யக் குளங்­க­ளை­யும் இன­வாத நோக்­கு­டன் அரச திணைக்­க­ளங்­கள் ஆக்­கி­ர­மிப்­ப­தன் மூலம் உள்­நாட்டு உற்­பத்­தியை பெருக்க முடி­யுமா?


தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகி அமைச்­ச­ரா­க­வும் அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்­புக் குழுத்­த­லை­வர்­க­ளா­க­வும் பத­வி­பெற்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளின் கண்­க­ளில் இத்­த­கைய அநீ­தி­கள் படு­வ­தில்­லையா? அல்­லது இத்­த­கைய அநீ­தி­க­ளுக்கு அவர்­க­ளும் தங்­கள் மறை­முக ஆத­ரவை வழங்­கு­கின்­ற­னரா? கோவில்வயல் விவ­சா­யி­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீதி அது ஒரு தனிச்­சம்­ப­வம் மட்­டு­மல்ல அது தமிழ் மக்­கள் மீதான நில அப­க­ரிப்பு ஒடுக்­கு­முறை நிகழ்ச்­சித் திட்­டத்­தின் ஒரு பகுதி – என்­றுள்­ளது.
Blogger இயக்குவது.